வெள்ளி, மார்ச் 11

என் மனம் கவர்ந்த தபு ஷங்கரின்

சேலையோரப்பூங்கா
எல்லா பெண்களுமே 
நிற்க்கும் காரைக் கடக்கையில் 
அதன் கண்ணாடியில்
தங்களை சரி செய்து கொள்கிறார்கள் ...
நானோ 
உன்னை கடக்கையில் 
உன் முகத்தை பார்த்தே சரி செய்து கொள்கிறேன் ...

எதற்கு எடுத்தாலும்  வெட்க்கப்படுகிராயே
என்று என்னை கேலி செய்யாதே
இந்த உலகில் உன்னை தவிர வேறு யாராலும் 
என்னை வெட்க்கப்படுத்த முடியாது.... 

கட்டிக்க போறவனை டேய் என்று கூப்பிடாலாமா
என்று அதட்டுகிறாள் அம்மா
கட்டிக்க போறவனை 
கூப்பிடவென்று
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய் ...

 யமுனைதான் 
எனக்கு புண்ணிய நதி 
அதுதான் காதல் வாழும் தாஜ்மஹாலை 
தொட்டுக்கொண்டு ஓடுகிறது ....

என்னிடம் இருக்கும் 
எந்த அழகு சாதனத்தை விடவும் 
என்னை அழகாக்கி விடுகிறது 
உன் ஒற்றை பார்வை ....

நீ இல்லாமல் 
உயிர் வாழமுடியாது என்று
நீ சொல்வதை 
நம்பமாட்டேன் 
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்துதானே
நான் பிறந்தேன்
அந்த மூன்று வருடங்கள் 
நான் இல்லாமல்த்தானே 
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாய் ....

வேறு ஆண்கள் என்னை பார்க்கையில்
முகத்தை திருப்பி கொள்கிறேன் நான்
நீ பார்க்கும் போது மட்டும் 
குனிந்து கொள்கிறேன் 
இதிலிருந்து உனக்கு தெரியவேண்டாமா
நான் உன்னைத்தான் 
காதலிக்கிறேன் என்று .....

நீ என்னை காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல் 
நீ தவிப்பதை பார்த்து 
என்ன இவன் பயந்தான்கொள்ளியாய் 
இருக்கிறான் 
என்று கவலை எல்லாம் கொள்ளவில்லை ...

காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் என்கின்ற மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருக்கிறேன்.....

(இவை சில வரிகள் )

4 கருத்துகள்: