வியாழன், மார்ச் 3

மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி கண்ட கனடா

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று கொழும்பு  இல் நடைபெற்ற கனடா மற்றும்பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியொன்றில் பாகிஸ்தான் அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் துடுப்பாட்டம் சொல்லும்படியாக அமையவில்லை 43 ஓவர்களில் 184 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது பாகிஸ்தான். 


இதையடுத்து அயர்லாந்தை போல் கனடாவும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சி வெற்றியைப் பெறுமா என்ற பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் கனடாவின் துடுப்பாட்டம் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்தது. 



அயர்லாந்தைப் போல் கனடாவால் தொடர முடியவில்லை. அதற்கேற்றால் போல ஷைட் அப்ரிடி தனது பந்து வீச்சால் கனடா வீரர்களை ஊதித்தள்ளினார்.  கனடா அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தானை 46 ஓட்டங்களால் வெற்றி பெறச் செய்தார்.














4 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சுடச் சுடப் பதிவுகள். இதைத் தான் சொல்லுவதோ விசேட செய்திகள் என்று?
    சகோதரம் கனடா, கென்யா, அயர்லாந்து இந்த மூன்று அணிகளை விட இங்கிலாந்தின் லங்காஷயர், லோக்‌ஷயர், அட நம்ம எஸ்.எஸ்.எஸ்ஸி (SSC) லோக்கல் கிறிக்கற் கழகங்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இந்த அணிகளை இறக்கியிருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரி சித்ரா தங்கள் வரவுக்கு மிக்க நன்றி .
    உங்கள் கருத்தை மேலும் மேலும் வரவேற்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. சகோதரம் நிரூபன் தங்கள் வரவுக்கு மிக்க நன்றி .

    ஹி ஹி ..தங்கள் சொல்லவதும் சரிதான் .ஆம் வர வர எதிர்ப்பாக்கும் அணிகள் மோசமான நிலைக்கும் போகும் வேளை எதிர்பாராத அணிகள் தங்கள் திறமையை திறம்ப காட்டுகின்றன .

    உங்கள் கருத்தை மேலும் மேலும் வரவேற்க்கிறேன்.

    பதிலளிநீக்கு