ஞாயிறு, மார்ச் 20

பதட்டமானால் பாதிப்பு இதயத்திற்கு



பதட்டமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகம்.
எந்நேரமும் பதட்டம், டென்ஷன் உள்ளவர்களுக்கு இருதய துடிப்பும், ரத்தக்கொதிப்பும் அதிகரிக்கிறது. ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் அதன் சுருங்கும் தன்மையும் அதிகரிக்கிறது.
மேலும் மாரடைப்பு வர முதன்மையான காரணம் புகைப்பிடிக்கும் பழக்கமே. சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் சிகரெட்டால் இருதயத்திற்கு வரும் பாதிப்பு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் வரும் தன்மையை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறு வயதில் ஏற்படும் மாரடைப்புக்கு புகைப்பழக்கமே முதன்மை காரணம். புகை பழக்கத்தால் ரத்தக்குழாயில் உள்ள சிறிய அடைப்புகளில் கீறல் ஏற்பட்டு ரத்தக்கட்டி உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது.
புகைப்பழக்கம் உடலின் பல பாகத்தையும் பாதித்தாலும் இருதயத்தையே அதிகம் பாதிக்கிறது. புகைப் பழக்கத்தை நிறுத்தினால் இருதயத்திற்கு கிடைக்கும் நன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரியை விட அதிக பலன் தரும்.
மேலும் பதட்டமான சூழ்நிலையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இது தவிர யோகா, தியானம் போன்றவையும் பெரிதும் உதவுகின்றன.

1 கருத்து: