திங்கள், மார்ச் 7

மகளீர் தினத்தில் பெண்களின் தீர்க்கமான முடிவு .


சாராயம் குடிக்க புகை பிடிக்க பழகியவர்கள் அதையே தம் வாழ்வில் Fashion என கொள்கிறார்கள் .ஆனால் அவர்கள் தினமும் இறந்து கொண்டு இருப்பதானது அவர்களால் மறக்க பட்டு விடுகிறது .


அதே போன்று சாராயம் குடிக்க பழகியவர்கள் எங்கு சென்றாலும் செய்வது அல்லது செய்ய தெரிந்து சாராயம் குடிப்பது மட்டுமே.அவர்களால் எந்த ஒரு மகிழ்ச்சியான செயற்பாடுகளிலும் மகிழ்ச்சியாக ஈடுபட தெரியாது .

நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கூடும் சந்தர்ப்பங்களில் அதனை சந்தோசமாக களிக்க தெரியாமல் சாராயம் FUN என்று நினைத்து தம்மை தாமே முட்டாள்கள் ஆக்கி மடமைத்தனத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள் . 


இப்படியானவர்களை  கூர்ந்து அவதானித்தால் அவர்களின் அசிங்க  தோற்றத்தை நாம் தெளிவாக விளங்கி கொள்ளலாம் .இந்த வழியில் பணம் கொடுத்து அசிங்கமாகுபவர்கள் இவர்கள் மட்டுமே..

எந்த ஒரு பெண்ணும் தனக்கு வரும் கணவன் வாழ்க்கை  முழுவதும் மலர்ந்த முகத்துடன் அழகான ஆடவானாக இருக்க வேண்டும் என்றே விரும்புவாள் .
அதை விடுத்து அசிங்கத்தை விரும்ப மாட்டாள்...


எனவே சாராயம் சொர்க்கம் என நினைக்கும் ஒரு ஆடவன் வாழ்க்கை இக்கு ஏற்றவன் அல்ல என்ற உண்மையை இம்முறை மகளீர் தினத்தில் இருந்து பெண்கள் உறுதி படுத்தி உள்ளார்கள் .

6 கருத்துகள்:

  1. //சாராயம் சொர்க்கம் என நினைக்கும் ஒரு ஆடவன் வாழ்க்கை இக்கு ஏற்றவன் அல்ல என்ற உண்மையை இம்முறை மகளீர் தினத்தில் இருந்து பெண்கள் உறுதி படுத்தி உள்ளார்கள் //

    நல்ல செய்தி :)

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரம், இந்தக் காலத்திலை ஒரு சில பெண்கள் சாராயம் குடிக்கிற மாப்பிளையைக் கட்டுவது தான் நாகரிகம் என்றும் நினைக்கிறார்கள் தானே?
    நாங்கள் பெரதெனியாவிலை படிச்ச போது, குடிக்கத் தெரியாதா பொடியங்களை, சிகரட் அடிக்கத் தெரியாத பொடியளை பெண்கள் ‘பொன்ஸ்’ என்று கேலி பண்ணியதும் உண்டு.
    குடி குடியைக் கெடுக்கும் எனும் ஆன்றோர் வாக்குச் சரி தானே?

    மகளிர் தின வாழ்த்துக்கள். சமூக முன்னேற்றம் நோக்கிய பாதையில் புரட்சிப் பெண்ணாக பதிவுலகில் நிறையப் பதிவுகள் தந்து எல்லோர் உள்ளங்களையும் கவரும் பதிவராக வரவேண்டும் என்பதோடு, சகல சௌபாக்கியங்களும் பெற்று நீங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் நல்ல பகிர்வு நன்றி... இதில் ஏதோ நகாரீகம் வளர்வதென நினைத்துக் கொள்கிறார்கள் உண்மயில் இதில் அரசாங்கமும் முதலாளிகளுமே பணம் விழுங்கிக் கொள்ள இவர்கள் தம் பணத்தை கரியாக்கிக் கொள்கிறார்கள்....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    பதிலளிநீக்கு
  4. மிக மிக நன்றி சுதர்சன் ..உங்களை போன்ற இளைஞர்களின் கருத்துக்களால் தான் மற்றவர்களும் விழிப்புணர்வு கொள்வார்கள் ..

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் நிருபன்..

    ஆம் தங்கள் கருத்தில் தவறில்லை .....அவர்கள் கூறினால் என்ன ..சற்று நீங்கள் சிந்தித்து கொள்ளலாமே..அவர்கள் இற்கு ஆகவா தாங்கள் இம் மண்ணில் பிறந்தீர்கள் ..

    தினம் தினம் இறந்த வண்ணம் உங்கள் மனைவியே உங்களை அசிங்கப்படுத்தும் ஒரு நிலைக்கு ஏன் நீங்கள் ஆளாக வேண்டும் ..(திருமணம் ஆகவில்லை என்றாலும் எதிர்காலத்தை உங்கள் நினைவில் கொள்ளுங்கள் )..

    உங்கள் கருத்தை மேலும் எதிர்பார்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி சகோதரன் மதி அவர்களுக்கு ...

    ஆம் உங்கள் கருத்து சாராயம் தான் உலகம் என்று வாழும் நபர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு தகவல்..

    பதிலளிநீக்கு