வெள்ளி, ஏப்ரல் 1

இறுதிப் போட்டிக்கான நடுவர்கள்


மும்பையில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு அவுஸ்திரேலியாவின் சைமன் டபெல், பாகிஸ்தானின் அலீம் தார் ஆகியோர் கள நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ஜெப் குரோவ் மேட்ச் ரெப்ரியாகவும், இங்கிலாந்தின் இயன் கோல்ட், ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது நடுவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சைமன் டபெல் தொடர்ச்சியாக 5 முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சிறந்த நடுவர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து: