சனி, மே 14

காதலித்தால் வாழ்க்கை நாசமாகிவிடும்பொதுவாக காதல் வாழ்க்கையைக் கொடுக்கும் என்பார்கள். ஆனால் இவரோ அது வாழ்க்கையைக் கெடுக்கும் என்கிறார். அவர்... நடிகை பாவனா! காதலித்தால் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால் நான் காதலிக்கமாட்டேன், என்கிறார் பாவனா. 

சித்திரம் பேசுதடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். தமிழில் வாய்ப்பில்லாத நிலையில் தெலுங்குக்குப் போய்விட்டார். 

தெலுங்கில் கோபிசந்தை அவர் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. இதுகுறித்துக் கேட்டபோது, சினிமாவில் கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். காரணம், நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கிப் போகிறது. 

சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலிச்சா வாழ்க்கை நாசமாகிவிடும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுவதையெல்லாம் பார்க்கிறோம். தேவையா இது... இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன், என்றார். 

ஒருவேளை யாராச்சும் கிடைக்கலையாக்கும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக