சனி, அக்டோபர் 22

‘அரட்டை வித் ஆர்யா… ஓ.கே-யா?’


‘அரட்டை வித் ஆர்யா… ஓ.கே-யா?’- சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி மாணவிகளுக்கு மெசேஜ் தட்டினால், ‘ஓஓஓஓஓகேய்…’ என்று எக்ஸ்பிரஸ் ரிப்ளை. இந்தப் பக்கம் ஆர்யாவுக்கு மெசேஜ் தட்டினால், ‘நண்பேன்டா.’ என்று மின்னல் ரிப்ளை. இனி ஓவர் டு தித்திப்பு மத்தாப்பூ சந்திப்பு! டி-ஷர்ட்டுக்கு மேட்ச்சான சிவப்பு நிற ‘ஐ 20’ காரில் வந்து இறங்கிய ஆர்யாவை, அப்படியே வகுப்பறைக்குக் கடத்திச் சென்று பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள் ‘சின்சியர்’ மாணவிகள்!


‘டெபிட், கிரெடிட்’ என்று போர்டில் ரூபல் கணக்கு போடப் போட… ஆர்யாவின் கண்களில் பூச்சி பறந்தது. ”இந்த பிராப்ளத்தை சால்வ் பண்ணுங்க!” என்று ஆர்யாவுக்கு உத்தர விட்டார்கள்.

”ஏ ஸ்கொயர் ப்ளஸ் பி ஸ்கொயர் இஸ் ஈக்வல் டு சி ஸ்கொயர் ப்ளஸ் டி ஸ்கொயர்” என்று ஆர்யா சமாளிக்க, ”நீங்க சொதப்புறதைப் பார்த்தா, சுனாமிக்குக்கூட கிளாஸ் பக்கம் ஒதுங்கி இருக்க மாட்டீங்கபோல. எந்த காலேஜ்ல என்ன படிச்சீங்க?” என்று விசாரித்தார் சுஷ்மிதா.

”நான் கிரசன்ட் இன்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சேன். கிளாஸுக்கே போக மாட்டேன். ஆனால், பின்னாடி நல்லா படிச்சு டிகிரி முடிச்சேன். காலேஜ் கேன்டீன் பப்ஸ் எப்படி இருக்கும்னு கேளுங்க சொல்றேன். ஆனால், இப்ப படிப்பு பத்திலாம்டிப்ஸ் கேட்காதீங்க. சுத்த போர். பாவம்,நீங்கள் லாம் வளர வேண்டிய பிள்ளைங்க. நல்லாப் படிங்க” என்று கெஞ்சல் தொனியில் ஆர்யா ஜகா வாங்க, ‘உச் உச்’ கொட்டி டாபிக்மாற்றிவிட்டார்கள் கேர்ள்ஸ்.

”நீங்க லவ் பண்ணணும்னா, அந்தப் பொண்ணு எப்படி இருக்கணும்?” என்று கொக்கி போட்டார் பூஜா. ”அதாவது, ‘உங்களை எப்படிங்க கரெக்ட் பண்றது’னு என்கிட்டயே கேக்குறீங்க. ஓ.கே. நோட் தி பாயின்ட் யுவர் ஹானர். அந்தப் பொண்ணு பேசறதைக் கேட்டுக்கிட்டே இருக்கணும்போல இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கணும். பார்த்தவுடனே மனசுக்குப் பிடிக்கணும். முக்கியமா பொண்ணு இந்தியாவிலேயே இருக்கக் கூடாது!” என்று தரையில் கட்டை விரலால் கோலம் போடாத குறையாகக் கல்யாண கண்டிஷன்களை அடுக்கினார் ஆர்யா.

”ஹேய்ய்ய்… இதுல ஒரு உள்குத்து இருக்கு கேர்ள்ஸ்… பார்ட்டியை ஷூட்டிங்னு ஒரு ஃபாரின் லொகேஷ னுக்குக்கூடக் கூட்டிட்டுப் போகாம, தேனி, மதுரை, கும்பகோணம்னே சுத்தல்ல விடுறதால, ஃபாரின்ல மாமனார் வீட்டுக்கு பிளான் பண்றார். செம உஷார் பார்ட்டிப்பா!” என்று ஹை பிட்ச்சில் அலறிய பிரியங்காவை ஆச்சர்யமாகப் பார்த்தார் ஆர்யா.

‘நான் உஷார்ன்னா, நீங்க என்ன… சுதந்திரத்துக்குப் போராடிய தியாகியா? ஆனா, நீங்க சொன்னது உண்மைதாங்க. ஊர்ப் பக்கமே ஷூட்டிங்கை முடிச்சிடுறாங்கப்பா. மெட்ராஸ்ல ஷூட்டிங் எடுக்கிறதுக்கே ‘மதராசபட்டினம்’ நடிக்க வேண்டி இருக்கு!” என்று ஃபீலிங் பிழிந்தார் ஆர்யா.

”என்ன மாதிரி படத்துல நடிக்கணும்னு உங்களுக்கு வீட்ல யாரும் அட்வைஸ் பண்ணுவாங்களா?” – நீனாவின் கேள்வி. ”ஃபேமிலியா..? படம் ரிலீஸ் ஆகும்போதுதான் நான் என்ன படத்துல நடிச்சிருக்கேன்னே அவங்களுக்குத் தெரியும்!” என்று சிரித்தார் ஆர்யா.

”கிசுகிசுலாம் படிக்கிறப்ப எப்படி இருக் கும்?” என்று ஆர்யாவின் கண்கள் பார்த்துக் கேட்டார் ஸ்ருதி.

”ஏங்க… நீங்க என்ன ஜர்னலிஸம் படிக்கிறீங்களா? கிசுகிசு பத்திலாம் கேட்கறீங்க. அதுவும் பத்திரிகைக்காரங்களை வெச்சுக்கிட்டு!” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டவர், ”தமிழ்நாட்ல பரவாயில்லைங்க. கேரளாவில் ‘எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. என் குழந்தை ஸ்கூலுக்குப் போகுது’னுலாம் எழுதிட்டாங்க!” என்று ஆர்யா நிறுத்த,
”இதேதான்… இதைத்தான் எதிர்பார்த் தோம். அப்படியே பூஜா, நிலா, பார்ட்டினு இன்னும் உங்களைப்பத்தி என்னலாம் கிசுகிசு இருக்கோ… அத்தனையும் க்ளியர் பண்ணிடுங்க. இந்த செமஸ்டரை உங்க பிட்டை வெச்சே ஓட்டிடுவோம்!” என்று மொத்தமாக கேரோ செய்தார்கள்.

”ஒரே ஒரு பொண்ணுகிட்ட மாட்டினாலே நொந்து நூடுல்ஸ் ஆகணும். இங்க பத்துப் பதினஞ்சு பொண்ணுங்ககிட்ட மாட்டிக் கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே, ஐயையோஓஓஒ!” என்று அழகாக அலுத்துக் கொண்டே ஆர்யா நம்மைப் பார்க்க, குறிப்பறிந்து அவரை அங்கிருந்து கடத்திக் காப்பாற்றிக் கரை சேர்த்தோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக