திங்கள், மார்ச் 14

இறுதிவரை சளைக்காமல் போராடிய கென்யா


உலகக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பெங்களூரில் இன்று நடைபெற்ற 31வது போட்டியில் அவுஸ்திரேலியா-கென்யா அணிகள் மோதின.
இப்போட்டியில் பூவா தலையா வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட இழப்பிற்கு 324 ரன் எடுத்தது.
325 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கென்யா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக காலின்ஸ் ஒபுயா 98 ரன்கள் (129 பந்து, 9 பவுண்டரி், 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மிஸ்ரா 72 ரன்கள், ஒடோயோ 35 ரன்கள் எடுத்தனர். 


இதையடுத்து அவுஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 கருத்து: