வியாழன், மே 12

எங்கேயும் காதல் ....ஒன்று மட்டும் உண்மைங்க .பாரிஸ் மட்டும் நல்ல இருக்கு.

 என்ன படம் ஐயா எடுத்து இருக்கிறார்கள் ..எங்கேயும் காதலாம் ..ஆனால் அங்கேயும் படம் பத்தோடு பன்னிரண்டுதான் .ஒன்று மட்டும் உண்மைங்க .பாரிஸ் மட்டும் நல்ல இருக்கு.

ஜெயம் ரவி , ஹன்சிகமேட்வானி , ராஜு சுந்தரம், சுமன் என திரைப்படங்களில் வந்தார்கள் நடிகர்கள் .பிரபுதேவா தயாரிப்பு .நயன்தாராவின் காதல் கதையாம் எங்கேயும் காதல் என பரபரப்பு தகவல்கள் .இப்படியா ???அவரது காதல் கதை என கேலி பண்ணி கிண்டலடிக்கும் அளவுக்கு திரைப்படத்தின் கதை.

ஒரு மென்மையான கதை கதையை முற்றிலும் வெளிநாட்டு சூழலில் சொல்ல வேண்டும் என்பது பிரபுதேவாவின் ஆசை .அதில் தப்பு ஏதும் இல்லை.காதலை காட்ட அவர் அதற்க்காக நேரம் செலவழித்து இருப்பது  அவரின் படத்தின் ஆரம்பத்திலேயே தெரிகிறது.ஆழ்மனதை தொடாத கதை , மனதை கவராத வசனங்கள்  எங்கேயும் காதல் என பெயர் வைத்து விட்டு பெண்களை ரசிப்பதிலும் ருஷிப்பதிலுமே திரைக்கதை செல்கிறது.

பெண்களை விரும்பும் ஜெயம் ரவி காதல் என்னும் சொல்லையே வெறுக்கிறார்.அது எல்லாம் அவசியம் அற்றது என ஹன்சிகவுக்கு கூறுவதும் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் கொண்ட ஹன்சிக அவர் பின்னால் உருகி உருகி காதலிப்பதும் அது புரியாமல் ஜெயம் ரவி பழகுவதும் ஆக அவர் இணைந்தார்களா?? இல்லைஎனில் ஹன்சிக காதல் தோற்றுவிட்டதா?? என்பதுதான் திரைப்படத்தில் கதை.

காட்சிகள் படம் ஆக்கப்பட்ட  விதம் திரைப்பட பின்னணியாளர்களின் இளமைத்தனத்தை காட்டி நிற்க்கிறது .ஆனாலும் இளமைகளின் மனதை தொடாதா கதையாய் சப் என்று அமைந்திருந்தது திரைப்படத்தின் திரைக்கதை.
படத்தின் நாயகன் ஜெயம் ரவி இக்கு ஏற்ற வேஷம் தான் .ஆனாலும் திரைக்கதையில் முழுமை பெறாமாலேயே வெளியேறி விட்டார் .அதே போல் காதலுக்கு நாயகனாய் அழகு பொழியும் இளமையுடன் வலம் வந்த ஜெயம்    ரவி எப்படி இளையர்களை ஏமாற்ற முடியும் என்பதையும்  நடித்து காண்பிக்கத் தவறவில்லை . படத்தின் ஒரு பகுதியில் அவர் பியர் போத்தில் ஏந்துகிறார்.

ஏன் ஐயா ???? கதை இல்லாத படம் கூட நல்லாகத்தானே ஓடிட்டு இருந்தது..பிறகு ஏன் இந்த போலித்தோற்றம்.நாங்களும் பார்த்துட்டுத்தானே இருந்தம் .திரைக்கு முன்னால நீங்கள் பொய்  வேஷம் போட்டதை . எங்கேயும் காதலுக்கும் அந்த பியர் போத்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியலைங்க. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது  எப்படி இளைஞர்களை ஏமாற்றலாம் என்பதை மட்டும் அப்பட்டமாக திரையிட்டார்கள் .நட்பு பாராட்டி இருவரும் சேர்ந்து போட்ட போலி நடிப்புகள் இருவரும் சேர்ந்து பியருடன் சேர்ந்து  நடித்த வெறித்தனமான நடிப்புகள்  கதைக்கு அவசியம் அற்ற ஒன்று .ஹன்ஷிகவின் அப் போலி நடிப்பு பெண்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. 


தெரியாமல் தான் ஐயா கேக்கிறன்  காதலை படம் எடுங்க, சண்டையை படம் எடுங்க, காதல் தோல்வியை படம் எடுங்க ஏன் இளைஞர்களை ஏமாற்றி பொய் இக்கு திரை இடுறிங்க??. உங்களுக்கு காசு சேர் . எங்கட இளையர்களுக்கு ஏன் பொய்யை காட்டி எமாற்றுரிங்க.. காத்திருந்தோம் ஜெயம் ரவி படம் வருது என்று  ...ஆனால் எல்லாமே கிண்டலடிகிற மாதிரியே வருதே .

உடளவில் கூட நம்ம ஹன்ஷிகாவிற்கு  நடிப்பு வரவில்லை .ஆனால் அந்த நடிப்பை மட்டும் ரவி கூட திறம்படவே நடித்து முடித்தார் ..பஜப்படாதேங்க நான் சொன்ன அதே போலி வேஷம் தாங்க.இந்தமாதிரியே அவசியம் அற்ற கதைகளும் நடிப்பும் ஆக எங்கேயும் காதல் சென்று கொண்டு இருந்தது.

இருந்தாலும் கேட்டதும்  காதுகளுக்கு  இனிமை  தாரும்  பாடல்கள்   உதடுகளில்  இப்பொழுதும் முணுமுணுக்கும் அளவுக்கு அமைத்திருந்தது .

எங்கேயும் காதல் என தவம் இருந்த திரைப்பட ரசிகர்களுக்கு மனதை வருடும் படியான நல்ல கதையை கொடுக்க தவறியது திரைப்பட பின்னணி யாளர்களின் தப்பு .அதை விட அவசியம் அற்ற இளையர்களை ஏமாற்றும் காட்சிகள் என எங்கேயும் காதலை எள்ளி நகையாட வைத்து விட்டார்கள் பின்னணி யாளர்கள்.

மொத்தத்தில எங்கேயும் காதல் வீண் பேச்சு வீண் நடிப்பு .........1000 இல ஒன்றுங்க ...பொழுது போகலையா TV யை போடுங்க பொய் வேஷம் போடுவாங்க ..நல்ல சிரிங்க ....

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள் .

தோழர்களே !!!! திரையரங்கில் நீங்கள் ஏமாறாமல் இருக்க உண்மையை உங்களுக்கு சொல்லிட்டன் தானே ..எனக்கு கருத்து சொல்லிட்டு போங்க....

3 கருத்துகள்:

  1. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... படம், மொக்கைதானே!

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரி...ஆம் சகோதரி ...ஹிஹிஹீ ....பொய் யை காட்டுற திரை உலகம் ஏன் உண்மையை மறைக்கிறாங்க ..

    பதிலளிநீக்கு
  3. வரும் முன் காப்பவன் புத்திசாலி
    மோசமான படத்துக்கு தெரியாமல்
    போகும் முன் தடுப்பவன் நல்ல நண்பன்
    நண்பனுக்கு இதயம் கனிந்த நன்றி

    பதிலளிநீக்கு